தொடர் கொலையாளி மக்ஆதர் மீது சிறைக்குள் தாக்குதல்?

தொடர் கொலைகளைப் புரிந்ததாக நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்ஆதர் மீது சிறைக்குள் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒன்ராறியோ கிங்ஸ்டன் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அதிகூடிய பாதுகாப்பு மிக்க Millhaven சிலைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அவர்மீது, அங்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அவர் கடந்த 11ஆம் திகதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும், அவருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.

கடந்த 2010ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அவர் எட்டு ஆண்களை கொலை செய்தமை நிரூபிக்கப்பட்ட நிலையில், கடந்த பெப்ரவரி 8ஆம் திகதி அவருக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.