குடிபோதையில் இரண்டு மடங்குக்கும் அதிக வேகத்தில் வாகனம் ஒட்டியவர் கைது!

டொரோண்டோவின் கார்டினர் கடுகதி சாலையில், அனுமதிக்கப்பட்டதை விட இரண்டு மடங்குக்கும் அதிக வேகத்தில் வாகனம் ஒட்டிய, 23 வயதான நபர் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக, காவல்துறை அறிவித்துள்ளது.


இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 90 கிலோமீற்றர்கள் எனும் வேக எல்லை கொண்ட கார்டினர் கடுகதி சாலையில், குறித்த நபர், மணிக்கு 204 கிலோமீற்றர்கள் எனும் வேகத்தில் வாகனத்தை செலுத்தியுள்ளார்.

தம்மால் மறிக்கப்பட்ட வேளை, அவர் மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள டொரொண்டோ காவல்துறை, மதுபாவனைக்கான சுவாச பரிசோதனைக்கு உடன்பட மறுத்த நிலையில், கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.