ஒண்டாரியோவில் மீள வடிவமைக்கப்பட்ட சாரதி அனுமதி அட்டைகள்!

ஒண்டாரியோவில் மீள வடிவமைக்கப்பட்ட சாரதி அனுமதி அட்டைகள்


ஒண்டாரியோ மாகாணத்தில், மீள வடிவமைக்கப்பட்ட சாரதி அனுமதி அட்டைகள், வரும் இலையுதிர் காலத்தில் அறிமுகப்படுத்தப்படுமென, மாகாண அரசு அறிவித்துள்ளது.

மோசடிகள் மற்றும் அடையாள திருட்டுக்களை தடுக்க, 5 தொடக்கம் 7 வருடங்களுக்கு ஒருமுறை, சாரதி அனுமதி அட்டைகள் புதிதாக வடிவமைக்கப்படவேண்டி உள்ள நிலையில், தற்போது நடைமுறையிலுள்ள அட்டைகள், 12 வருடங்களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டவை என, ஒண்டாரியோ போக்குவரத்து அமைச்சர் Jeff Yurek தெரிவித்துள்ளார்.

தற்போதையை சாரதி அனுமதி அட்டைகள், பச்சையும் நீலமும் கலந்த நிறத்தில் உள்ள நிலையில், புதிய அட்டைகள் பிரதானமாக நீல நிறத்தில் வடிவமைக்கப்படும் என, அவர் கூறியுள்ளார்.

ஆளும் முற்போக்கு பழமைவாத கட்சியின் வண்ணம் நீலம் என்பது குறிப்பிடத்தக்கது.