ஸ்கார்பரோ களஞ்சியசாலை தீ விபத்து: பொலிஸார் தீவிர விசாரணை!

ஸ்கார்பரோவில் உள்ள தொழில்துறை களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீவிபத்துக் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


குறித்த தீ எவ்வாறு பரவியது என்பது குறித்து, இதுவரை எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மில்லிகென் பகுதியில் ஸ்டீல்ஸ் மற்றும் மிட்லான்ட் வீதிகளில் உள்ள களஞ்சியசாலையிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த தீ ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தில் பெருமளவான பொருட்கள் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றபோது, அதன் மதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இருப்பினும், குறித்த தீ விபத்துத் தொடர்பாக எவருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் தற்போது விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.