கனடாவை அச்சுறுத்தும் வைரஸ் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவில் பரவிவரும் வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


கனேடிய சுகாதாரத்துறை இதனைத் தெரிவித்துள்ளது.

கனடாவின் ஆறு மாகாணங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸிற்கு salmonella என பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் தாக்கமானது பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்ட்டா, சஸ்கச்சுவான், மனிடோபா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய 6 மாகாணங்களிலேயே வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் இதுவரையில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை இதன் அறிகுறிகளாக காணப்படுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.