ஒன்றாரியோ விபத்தில் மூவர் படுகாயம்!

ஒன்றாரியோவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கார் ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த விபத்துக் குறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.