வின்னிபெக் பகுதியில் விபத்து: முதியவர் உயிரிழப்பு!

வின்னிபெக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மாகாண வீதி 302இல் இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்தவர், 64 வயது முதியவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதி வேகத்தில் விரைந்து வந்த கார், மரத்தின் மீது மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்திற்கு அதிக மது அருந்தியமையே காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.