கனடா செல்ல முயன்று கிளிநொச்சியில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற போது கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட 26 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் சநதேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்வதற்கு முயன்ற போது கடந்த 05 ஆம் திகதி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த போதே சந்தேகநபர்கள் 26 பேரும் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த முகவர் ஒருவருக்கு பணம் செலுத்தி இவர்கள் கனடாவிற்கு செல்ல முயன்றுள்ளனர்.

145,000 ரூபா பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.