பயங்கரவாத தாக்குதல்கள் : கனடா புலனாய்வு துறையும் உச்சபட்ச அவதானத்துடன் செயற்படுகிறது!

நியுஸிலாந்து – கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களை அடுத்து கனடா போன்ற நாடுகளின் புலனாய்வுத் துறையினரும் சமூக வலைத்தளங்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர்.


வெறுக்கத்தக்க கருத்துப் பறிமாற்றங்கள் மற்றும் தீவிரவாத மூளைச் சலவைகளை எதிர்த்துப் போரிடுவதற்கும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.

நியுஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் அண்மையில் கருத்து தெரிவிக்கையில், இதுவொரு தனிப்பட்ட நாட்டினுடைய பிரச்சினையல்லவெனவும், சர்வதேச பிரச்சினையாக கவனத்தில் எடுத்து உலக அரச தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எனவே, சமூக வலைத்தளங்களின் உள்ளீடுகள் தொடர்பாக எந்த தருணத்திலும் அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக கனடா, நியுஸிலாந்து, அவுஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளின் புலனாய்வு முகவரகங்கள் தங்களின் உச்சபட்ச அவதானத்தை செலுத்தி வருகின்றன.