கனடா உள்ளிட்ட நாடுகளில் இளவரசரின் நிதியம் விரிவாக்கம் – சர்வதேச தூதுவராக லயனல் ரிச்சி

கனடா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் வசிக்கும் இளைஞர்களின் கல்வி, தொழில் மற்றும் ஏனைய பயிற்சி நடவடிக்கைகளுக்காக பிரித்தானிய இளவரசர் சார்ளஸின் சர்வதேச நிதியம் உதவியளித்து வருகின்றது.


குறிப்பாக கனடா, அவுஸ்ரேலியா, பாபடோஸ், கிரேக்கம், ஜோர்தான், மோல்டா, பாகிஸ்தான் மற்றும் நியுஸிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த நிதியம் கடந்த 2015 ஆம் ஆண்டு இளவரசரால் ஸ்தாபிக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

அதன் சர்வதேச தூதுவராக பிரபல பாடகர் லயனல் ரிச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், இருவரும் நேற்று முன்தினம் பாபடோஸில் சந்தித்துக் கொண்டனர்.

கரிபியன் நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இளவரசர் சார்ளஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோர் ஏனைய நாடுகளில் உள்ள சர்வதேச நிதியம் தொடர்பாக கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, பிறிதொரு பாடகரான ரொம் ஜோன்ஸ்ஸையும் இளவரசர் சந்தித்தார்.