அம்பர் எச்சரிக்கை தாமதமாக கிடைத்ததை முறையிட, அவசரகால தொடர்பு இலக்கமான 911க்கு அழைக்க வேண்டாம்

ஒண்டாரியோவில், அம்பர் எச்சரிக்கை தாமதமாக கிடைத்ததை முறையிட, அவசரகால தொடர்பு இலக்கமான 911க்கு அழைக்க வேண்டாம் என, டொரோண்டோ காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


நேற்றுமுன்தினம், 5 வயதான சிறுமி ஒருவர், அவரது தந்தையால் கடத்தப்பட்டமை தொடர்பில், மாலை 5 மணியளவில் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன் மூலமாக கிடைத்த தகவலை அடுத்து, குறித்த சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், அவரின் தந்தையும் கைது செய்யப்பட்டார்.

மாலை 6 மணியளவில் அம்பர் எச்சரிக்கை ரத்து செய்யப்பட்ட போதும், அதன்பின்னரும், கைப்பேசிகளில் தமக்கு எச்சரிக்கை தகவல்கள் வந்ததாக, அவசரகால தொடர்பு இலக்கத்துக்கு அழைத்து பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவசரகால நிலைமைகளின் போது மட்டுமே 911ஐ அழைக்கும்படி அறிவுறுத்தியுள்ள டொரோண்டோ காவல்துறையினர், தாமதமாக எச்சரிக்கை தகவல் கிடைப்பது தொழில்நுட்ப சிக்கலே தவிர, அவசர நிலை அல்ல என சுட்டிக்காட்டியுள்ளனர்.