வனப் பகுதியில் உள்ள சால்மன் மீன்களின் வாழ்விடங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு!

வனப் பகுதியில் உள்ள சால்மன் மீன்களின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்கு, 142.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளது.


மத்திய அரசாங்கம் மற்றும் பிரிடிஷ் கொலம்பியா அரசாங்கம் இணைந்து, இந்த வேலைத் திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது.

மத்திய மீன்பிடி அமைச்சர் ஜொனாதன் வில்கின்சன் மற்றும் பிரிடிஷ் கொலம்பியாவின் முதல்வர் ஜோன் ஹோர்கன் ஆகியோர் இதுதொடர்பிலான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளனர்.

இதில் மத்திய அரசாங்கம் மட்டும் இத்திட்டத்திற்காக சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளது.

குறித்த நிதியானது, மீன்களின் வாழ்விடங்களை ஆராயும் குழு மேற்கொள்ளும் வேலைத்திட்டம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.