மனிடொபா டைண்டால் கல் கட்டடத்தை புனரமைப்பதற்கு 150 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கீடு!

நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மாகாணத்தின் அடையாள சின்னமாக விளங்கும் டைண்டால் கல் கட்டடம், மீள புனரமைப்பதற்கான 150 மில்லியன் டொலர்கள் செலவழிக்கவுள்ளதாக மனிடொபா அரசாங்கம் தெரிவித்துள்ளது.


சில பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பதற்காக குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ஸ்காட் ஃபீல்டிங், தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வந்த மின்சார மற்றும் குழாய் திருத்தும் பணிகளுக்கான வேலைதிட்டங்கள், முடியும் தருவாயில் இருப்பதாக அவர் மேலும், கூறியுள்ளார்.

குறித்த நிதியானது 15 ஆண்டுகளுக்கு ஏற்ற வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த மறுசீரமைப்பு திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய, ஒரு ஆலோசனைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.