பிரிடிஷ் கொலம்பியாவில் வீதிகளின் பாதுகாப்பு குறித்து மேயர் கவலை!

பிரிடிஷ் கொலம்பியாவில் வீதிகளின் பாதுகாப்பை அலட்சியம் செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


மரங்களை ஏற்றிச்செல்லும் லொறியொன்று அதிவேத்தில் சென்று பின்னர், வீதியில் புரளும் காணொளியொன்று வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு, குறித்த லொறி புரளுவதற்கு முன்னர், அதிவேகமாக செல்லும் காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், வீதிகளில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக போர்ட் அல்பெர்னி மேயர் ஷெரீ மினியன்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஆகையால் இதற்கு அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

எனினும் இச்சம்பத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், இது மிகவும் ஆபத்தான விடயமாக தாம் பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.