சம்பளம் தொடர்பில் கனேடியர்கள் அதிருப்தி: ஆய்வில் தகவல்

பெரும் எண்ணிக்கையிலான கனேடியர்கள் தங்களது சம்பளங்கள் போதுமானதல்ல என, கருத்து வெளியிட்டுள்ளனர்.


அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் அதிகளவான கனேடியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பில் திருப்தி அடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில், சென்ஸ்வைட்டினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கருத்துக் கணிப்பில் பங்கேற்றிருந்த 13 வீதமானவர்கள் மட்டுமே தங்களது தற்பொழுது வழங்கப்படும் சம்பளம் போதுமானது என திருப்தி வெளியிட்டுள்ளனர்.

சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டுமென ஐம்பது வீதத்திற்கும் மேற்பட்ட கனேடிய தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.