கல்கரியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு!

வடமேற்கு கல்கரியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார், தெரிவித்துள்ளனர்.


4635 16 அவனியூ பகுதியில் உள்ள ரெட் காபர்ட் இன் விடுதியொன்றில் இருந்து, நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆண்னின் பிரேத பரிசோதனைகள் திங்கட் கிழமை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது சடலம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம், இதே பகுதியில் 43 வயதான பெண்னொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆணொருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.