நோர்த் யோர்க் வீதி விபத்து: மூவர் மருத்துவனையில், ஒருவர் கைது

இன்று காலை வேளையில் நோர்த் யோர்க் பகுதியில் வாகனம் மோதிவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவத்தின் போது படுகாமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Keele Street மற்றும் Rustic வீதிப் பகுதியில் இன்று அதிகாலை 12.25 அளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் இரண்டு வாகனங்கள் தொடர்பு பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்றின் சாரதி சம்பவ இடத்தில் தரித்திருக்காது தப்பிச் சென்றதாகவும், சிறிது நேரத்தின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது, சம்பவ இடத்தில் தரித்திருக்காமை, அவதானமற்ற முறையில் வாகனத்தைச் செலுத்திச் சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்ள பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.