கைது செய்ய முன்னர் பதவி விலகுவதாக மகள் கோரினார்: ஹுவாவி தலைவர் தெரிவிப்பு

ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி Meng Wanzhou தாம் கைது செய்யப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முதல் வேலையில் இருந்து விலகுவதாகவும் புதிய வேலை ஒன்றை செய்ய விரும்புவதாகவும் தம்மிடம் கூறியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.


ஹுவாவி நிறுவன தலைவரும் Meng Wanzhou இன் தந்தையுமான Ren Zhengfei  சீனத் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று (வியாழக்கிழமை ) அளித்த செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.

Meng Wanzhou நிம்மதியாக கடமையாற்றவில்லை அவரது கைதிற்கு பின்னர் எமது உறவு பலமாகியுள்ளது. இதேவேளை வாழ்க்கை எவ்வளவு கடிமனாது என்பது அவருக்கு புரிந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி Meng Wanzhou கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை மீறி ஈரானுக்கு தொலைதொடர்புக் கருவிகளை வழங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 30 வருடங்களுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துமாறு அமெரிக்கா கோரி வரும் அதேவேளை, அவ்வாறு இடம்பெற்றால் கனடா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென சீனா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.