விமான விபத்தில் பலியான ரொரன்ரோ முதியவர் அடையாளம் காணப்பட்டார்

எதியோப்பிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 18 கனேடியர்கள் உள்ளிடட 157 பேரும் பலியாகிவிட்ட நிலையில், உயிரிழந்தவர்களில் ரொரன்ரோவைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவரது அடையாளம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


இஸ்மைலி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த அந்த 72 முதியவர் ரொரன்ரோவைச் சேர்ந்த அமீன் நூர்மொஹமட் எனவும், அவரின் குடும்பத்தார் கென்யா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக அறியக்கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை இனங்கண்டு முடிப்பதற்கு இன்னமும் சில நாட்கள் ஆகும் என்று எதியோப்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.