டொரோண்டோ பெரும்பாக பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!

தெற்கு ஒண்டாரியோவில், இன்றும் நாளையும் உயர்வடைகின்ற வெப்பநிலை காரணமாக, வெள்ளத்துக்கான சாத்தியங்கள் உள்ளதாக, டொரோண்டோ பெரும்பாக பாதுகாப்பு அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.


உருகும் பனி மற்றும் மழைப்பொழிவு காரணமாக, ஆறுகளின் நீரோட்டம் அதிகரிக்கும் நிலையில், ஏற்கனவே அவற்றில் தேங்கியுள்ள பனிக்கட்டிகள், நீரோட்டத்தை தடுத்து அபாயமான சூழலை தோற்றுவிக்கலாம் என அது எச்சரித்துள்ளது.

நீர்நிலைகளை அண்மித்த இடங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ள டொரோண்டோ பெரும்பாக பாதுகாப்பு அதிகாரசபை, குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் அவற்றில் அருகில் செல்லாமல் கண்காணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.