கொரியா டவுனில் விபத்து: மூவர் மருத்துவமனையில்

நேற்று புதன்கிழமை மாலை வேளையில் ரொரன்ரோ கொரியா டவுன் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Bloor Street West மற்றும் Manning Avenue பகுதியில், நேற்று மாலை ஆறு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ள நிலையில், இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் இரண்டு பாதசாரிகளும் தொடர்புபட்டுள்ளதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து ஒருவர் பாரதூரமான காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும், மேலும் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த இந்த விபத்தினை அடுத்து அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.