போயிங் 737 Max 8 ரக விமானங்களை தற்காலிகமாக நிறுத்துகிறது சண்விங்

கனடாவின் சண்விங் (Sun Wing) பயணிகள் போக்குவரத்து விமான நிறுவனம் தனது விமான சேவைகளில் இருந்து “போயிங் 737 Max 8” ரக விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு முடிவு செய்துள்ளது.


எதியோப்பிய பயணிகள் விமான நிறுவத்தின் குறித்த இதே ரக விமானம் ஒன்று அண்மையில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்ட நிலையில், சில நாடுகளின் விமான சேவை நிறுவனங்கள் குறித்த ரக விமானத்தினை சேவையில் ஈடுபடுத்துவதனை தற்காலிகமாக முற்றாக நிறுத்தியுள்ளன.

எயர் கனடாவும் பிரித்தானியாவுக்கான தனது சேவைகளில் குறித்த அந்த “போயிங் 737 Max 8” ரக விமானங்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது சண்விங் நிறுவனமும் தனது சேவைகளில் இருந்து குறித்த அந்த ரக விமானங்களை தற்காலிகமாக நீக்கி வைக்கும் முடிவினை நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்து்ளளது.

எனினும் குறித்த அந்த அறிக்கையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அன்றி, பல நாடுகளும் தமது நாட்டு வான் பரப்பில் குறித்த அந்த ரக விமானத்தின் பறப்பினை தடை செய்துள்ள நிலையில், வர்த்தக காரணங்களால் இந்த முடிவினை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.