லண்டனுக்கான அனைத்து விமான சேவைகளையும் ரத்துச் செய்தது எயார் கனடா

லண்டனுக்கான அனைத்து விமான சேவைகளையும் எயார் கனடா  நிறுவனம் ரத்துச் செய்துள்ளது.


போயிங் மக்ஸ் 8 ரக விமானங்கள் தமது வான்வெளியில் பறப்பதற்கு பிரித்தானியா தடை விதித்ததை தொடர்ந்தே எயர் கனடாவின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, மொன்றியலிலிருந்து கரீபியன் தீவுகளுக்கான இரு விமான சேவைகளை எயார் கனடா நிறுவனம் இன்று (புதன்கிழமை)  ரத்துச் செய்துள்ளது.

ஹலிஃபக்ஸ் நோக்கி நேற்று மாலை பயணிக்கவிருந்த எயார் கனடா விமானம் ரத்துச் செய்யப்பட்டதுடன், செயின்ட் ஜோன்ஸ் நோக்கி இன்று பயணிக்கவிருந்த விமானமும், நாளைய தினத்திற்கான விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பிரான்ஸ், ஜேர்மன், அயர்லாந்து உள்ளிட்ட பலநாடுகள் பிரித்தானியாவின் இந்த நடைமுறையை பின்பற்றி போயிங் விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. ஆனால், போயிங் ரக விமானங்களை எவ்வித தயக்கமுமின்றி போக்குவரத்தில் ஈடுபடுத்தவுள்ளதாக கனேடிய போக்குவரத்து அமைச்சர் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.