தமிழ் ஆராட்சியாளர் தலைமையில் கனடாவில் ஆராச்சியாளர்கள் உயர் ஆபத்தான சூழ்நிலைகளில் தீயணைப்பு வீரர்களை கண்காணிக்க சமிக்கை கருவியொன்றை கண்டுபிடித்துள்ளனர்.

ஆபத்தான நிலைமைகளில் பணிபுரியும் தீயணைப்பு படையினர் போன்றோரின் நகர்வுகளை அவதானிக்கக்கூடிய சமிக்கை கருவியொன்றை கண்டுபிடித்துள்ளதாக, McMaster பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.


மின்கலங்கள் இல்லாமல், நிலையியல் மின்சார முறையில் இயங்கும் இந்த சமிக்கை கருவிகள் மூலம், குறித்த பணியாளர் நகர்கிறாரா என்பதை கண்காணித்து, அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமென அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அணிந்து கொள்பவரின் இயக்கத்தின் மூலமே சக்தியை பெற்று இயங்கக்கூடிய இக்கருவிகள், கடும் வெப்பத்தை தாங்கக்கூடியவை என, குறித்த ஆய்வுகளுக்கு பொறுப்பான பொறியியல் பேராசிரியர் ரவி செல்வகணபதி தெரிவித்துள்ளார்.

அதனை அணிந்திருப்பவர், நடத்தல் ஓடுதல் என எவ்வாறான இயக்கத்தை மேற்கொள்கிறார் என்பதை கூட, இந்த சமிக்கை கருவிகளின் மூலம் அறிந்துகொள்ள முடியுமென அவர் கூறியுள்ளார்.