கனடாவை அச்சுறுத்தும் measles நோய்!

கனடாவை அச்சுறுத்தும் புதிய நோய் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கனேடிய சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வான்கூவர் பகுதியில் மண்ணன் அல்லது மணல்வாரி என்று அழைக்கப்படும் இந்த measles நோய் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது வைரஸ் ஒன்றினால் பரவும் ஒரு தொற்று நோய் எனவும் கனேடிய சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த வைரஸ் தொற்று தொடர்பாக அவதானத்துடன் செயற்பாடு பொதுமக்களிடம் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.