பாலின ஊதிய சமத்துவமின்மை சட்டமூலம் தொடர்பிலான கருத்தறியும் நடவடிக்கை!

ஒண்டாரியோவில், பாலின ஊதிய சமத்துவமின்மையை நீக்குவதற்கான சட்டமூலம் தொடர்பிலான கருத்துக்களை, மாகாண அரசு கேட்டறிந்து வருகிறது.


குறித்த சட்டமூலத்தை கடந்த லிபரல் அரசு கொண்டுவந்திருந்த போதிலும், தற்போதைய முற்போக்கு பழமைவாத கட்சி அரசு, அதனை அமுல்படுத்த தடை விதித்திருந்தது.

தேர்தலுக்கு முன்னர், மக்களின் கருத்துக்களை கேட்டறியாமலே இச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டதாக, ஒண்டாரியோ தொழிலாளர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள, பாலின ஊதிய சமத்துவமின்மையை நீக்குவதற்கான சட்டமூலம் தொடர்பிலான கருத்தறியும் நடவடிக்கைகள், வரும் ஏப்ரல் 5ம் திகதிவரை முன்னெடுக்கப்படும்.

கனடாவில், ஆண் ஒருவரின் ஊதியத்தின் 70 சதவீதத்தையே பெண் ஒருவர் பெறுவதாக, கனடிய புள்ளிவிபரவியல் திணைக்கள தரவுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.