புலிகள் தற்கொலைத்தாக்குதல்களை நடத்தியதற்கு அவர்களுக்கிருந்த கோபம் வேறு! மதம் அல்ல என்கிறார் இம்ரான் ஹான்!

செப்பரம்பர் 11 தாக்குதலுக்கும் முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளே அதிகளவான தற்கொலைத்தாக்குதலை நடத்தினர். அவர்கள் இந்துகளே. ஆனால் அவர்கள் மதத்தின் பெயரால் தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் வேறொரு தேவைக்காக நடத்தினர்” – இவ்வாறு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.


விரக்தி மற்றும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளினால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் மதம் சார்ந்து அவர்கள் தாக்குதல்களை நடத்தவில்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும், செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு முன்னதாகவே இந்துக்களான விடுதலை புலிகள் வீரியமான தற்கொலை தாக்குதல் முறைமையை பயன்படுத்தி இருக்கின்றார்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் இன்று (வியாழக்கிழமை) முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். குறித்த தீர்மானம் தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய பாகிஸ்தான பிரதமர், “இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்வதாக இந்தியா தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றது. தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்னதாகவே உலக அளவில் வீரியமான தற்கொலை தாக்குதலைளை விடுதலை புலிகள் நடத்தியிருந்தனர்.

விடுதலைப் புலிகள் சார்பில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள். அவர்கள் மதத்தின் பெயரால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனை செய்தனர்” என இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் வரலாற்றில் இம்ரான் கானின் இன்றைய நாடாளுமன்ற உரை வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒன்றாக சர்வதேச ரீதியில் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பலவீனமான ஒரு இனத்தின் பலமான ஆயுதமே கரும்புலிகள்..
தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் சொன்ன வார்த்தையையே இம்ரான் காணும் இந்த பேச்சில் சுட்டி காட்டியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு.

“பாகிஸ்தானுக்கு போர் முக்கியம் இல்லை. ஆனால் நாம் கோழைகள் அல்லர். போரில் செலவு செய்ய எனக்கு விருப்பம் இல்லை. நான் நாட்டின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவே விரும்புகின்றேன்.

“பாகிஸ்தானில் மிக ஒழுக்கமாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி. புல்வாமா தாக்குதல் போன்ற தாக்குதலை எந்த நாடாவது நடத்துமா? எவ்வாறு இந்தியா பழி சுமத்துகின்றது என்பது புரியவில்லை. புல்வாமா தாக்குதல் குறித்த ஆதாரங்கள் இருப்பின் முன்பே எமக்கு அளித்திருக்கலாம். அதை நாம் விசாரித்திருப்போம். பிரதமர் மோடியிடம் பலதடவை பேச முயற்சித்தேன். ஆனால் சாத்தியம் ஆகவில்லை.

“தற்கொலைப்படை தாக்குதல் மதத்தின் அடிப்படையில் நடைபெறுவதில்லை. செப்ரம்பர் 11 முன்பு வரை தமிழீழ விடுதலைப்புலிகளே அதிகளவான தற்கொலை தாக்குதல்களை நடத்தினர். அவர்கள் இந்துக்கள். ஆனால் அவர்கள் மதத்தின் பெயரால் நடத்தவில்லை. அவர்களுக்கு இருந்தது வேறு விதமான கோபம்.

“நாங்கள் மக்களின் நன்மை மற்றும் அமைதி போன்றவற்றை கருத்தில் கொண்டு அபி நந்தனை விடுதலை செய்கிறோம்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.