அரசாங்க தரப்பில் இருந்து அழுத்தம் : ஜோடி வில்சன்

அரசாங்க தரப்பில் இருந்து தனக்கு அழுத்தங்கள் கிடைத்ததாக முன்னாள் நீதி மற்றும் கனடாவின் சட்டமா அதிபர் ஜோடி வில்சன்-ரேபவுட் தெரிவித்துள்ளார்.


SNC லாவ்லின் விவகாரம் தொடர்பான செயற்பாடுகளுக்கே இந்த மறைமுக அச்சுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக பொதுநீதிக்குழு முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் பிரதமர் அலுவலகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் இருந்து அந்த அழைப்புக்கள், குறும் செய்திகள் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

SNC லாவ்லின் விவகாரத்தில் 11 பேர் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து 10 ற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.