சிரியாவிலிருந்து அமெரிக்க படையினரின் வெளியேற்றம் கனடாவை பாதிக்குமா?

சிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முடிவு, அதற்கு அயல்நாடான ஈராக்கில் நிலைகொண்டுள்ள கனடிய இராணுவத்தினரின் நடவடிக்கைகளில் செலுத்தக்கூடிய தாக்கங்கள் தொடர்பில், உன்னிப்பாக அவதானித்து வருவதாக, கனடிய சிறப்புப்படைகளின் தளபதி தெரிவித்துள்ளார்.


200 நேட்டோ படையினர் உள்ளடங்கலாக, கிட்டத்தட்ட 500 கனடிய இராணுவத்தினர், ஈராக்கில், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில், அந்நாட்டு அரச படைகளுக்கு உதவி வருகின்றனர்.

சிரியாவைவிட ஈராக்கில், வேகமாக ஐஎஸ் பயங்கரவாதிகள் மீளுருவாக்கம் பெற்றுவருகின்ற போதிலும், சிரியாவிலிருந்து அமெரிக்க படையினர் மீள அழைக்கப்பட்டால், அங்கு, ஒரு வருடத்துக்குள் அவர்கள் மீள பலம்பெறுவார்கள் என, அமெரிக்க புலனாய்வு அறிக்கைகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.