பிரபல ஓவியர் Digi கருணா மரணம்!

கனடாவில் நன்கு அறியப்பட்ட பிரபல ஓவியர், வரைகலையர், மேடை ஒருங்கிணைப்பாளர், சமூக சேவகர், விமசகர், புகைப்படக் கலையர் திரு. கருணா (ஜூயின்) Karuna Vincent நேற்றிரவு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.


டொரோண்டோ தமிழ், மற்றும் தமிழ் ஸ்டார் ஆகியவற்றின் ஆரம்பகால ஆலோசகராகவும் அதன் முத்திரை (LOGO) வடிவமைப்பாளரும் திரு.கருணா என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.கருணா அவர்கள் யாழ் கரவெட்டியை பிறப்பிடமாகவும், ஹாட்லிக் கல்லூரியின் பழையமானவரும், நவீன ஓவியங்கள், மற்றும் சிற்பங்கள் மூலம் இலங்கையில் தனித்த ஆளுமை படைத்து, ஓவியப் பயிற்சி வகுப்புகளை யாழ்ப்பாணத்தில் நடத்தி வந்த ஓவியர் மாற்கு (அ. மாற்கு) அவர்களின் மாணவருமாவார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதுடன் எமது
அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.