ஐ.எஸ் இல் இணைய முயற்சித்த கனேடியர் சிறையிலிருந்து விடுதலை

சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்துக் கொள்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த கனேடியர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றபோதிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்குள் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீண்டும் ஐ.எஸ். இயக்கத்தில் இணையக்கூடும் என்ற சந்தேகம் நிலவுகின்றநிலையிலேயே அவரது விடுதலை அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வித தீவரவாதச் செயல்களிலும் ஈடுபடாத நிலையில் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றவாளிகளின் விடுதலை குறித்து தீர்மானிக்கும் ‘பரோல் குழு’ அறிவித்துள்ளது.