பிரம்டன் மாடி வீட்டில் தீப்பரவல்: ஒருவர் ஆபத்தான நிலையில்

பிரம்டனில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீப்பரவலில் பாரதூரமான காயங்களுக்கு உள்ளான ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பல்மோரல் ட்ரைவில், பிரமாலியா வீதியில் உள்ள குறித்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், நேற்று இரவு ஒன்பது மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்ட 57 வயதான ஆண் பலத்த தீக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில ்விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், இந்த தீப் பரவல் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளதுடன், அது தொடர்பில் 46 வயது ஆண் ஒருவரையும் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.