றெக்ஸ்டேல் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை

நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு (Feb 13, 2019) றெக்ஸ்டேல் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வெளியே வைத்து ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


Rexdale Boulevard மறறும் Islington Avenue பகுதியில், Bergamot Avenueவில் முன்தினம் புதன்கிழமை இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்ட 28 வயது ஆண், உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திலிருந்து ஒருவர் கார் ஒன்றில் ஏறித் தப்பிச் சென்றதை கண்டதாக அந்த பகுதியில் உள்ள ஒருவர் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு ஆண் சந்தேக நபர்கள் என்ற தகவல் மட்டுமே தற்போதைக்கு உள்ளதாகவும், பச்சை நிற SUV ரக வாகனம் ஒன்றிலேயே அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.