ஐக்கிய கொன்சவேற்றிவ் கட்சியின் புதிய சீர்திருத்தங்கள்!

வரவிருக்கும் மாகாணத் தேர்தலுக்கு முன்னதாக ஐக்கிய கொன்சவேற்றிவ் கட்சி, விரைவான ஜனநாயக சீர்திருத்தங்களை வெளிப்படுத்தியுள்ளது.


குறித்த சீர்திருத்தத்தில் தேர்தலின் போது கட்சியின் உறுப்பினர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்தால் அல்லது கட்சி தாவினால் அவர்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில் இதற்காக ஐக்கிய கொன்சவேற்றிவ் கட்சி ‘ரீ கோல்’ என்ற சட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் எம்.எல்.ஏ. ஒருவரை பதவியிலிருந்து நீக்குவது என்றால் வாக்காளர்கள் முறைப்பாட்டினை வழங்க முடியும் என அக் கட்சியின் தலைவர் ஜேசன் கென்னே தெரிவித்துள்ளார்.