பிரதமருக்கு எதிரான விமர்சனங்களை தோற்றுவித்தது முன்னாள் அமைச்சரின் இராஜினாமா

முன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சனின் பதவி விலகலை தொடர்ந்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பல்வேறு பின்னடைவுகளை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஜொடி வில்சனின் பதவி விலகலுக்கான உண்மையான காரணத்தை லிபரல் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

இது ட்ரம்பின் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தின் பின்னடைவாக காணப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால், இவ்வாறான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் பிரதமர் ட்ரூடோ மறுத்துள்ளார். இதேவேளை, ஜொடி வில்சனுக்கு ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பின் அதனை அவர் தனது கவனத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.