கனடாவின் ஐக்கியத்தை வலியுறுத்தி டிரக் தொடரணி

கனடாவின் ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையிலான டிரக் வாகன தொடரணி அல்பேர்ட்டாவிலிருந்து ஒட்டாவாவை நோக்கி புறப்படுகிறது.

அல்பேர்ட்டாவிலிருந்து இன்று (வியாழக்கிழமை) புறப்படும் டிரக் தொடரணி, நான்கு நாள் பயணமாக ஒட்டாவாவை சென்றடையவுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் பலரும் அதிருப்தி கொண்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்தும் வகையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.

சமாதானத்தை விரும்பும், மரியாதைக்குரிய அனைத்து கனேடியர்களுக்கும் இந்த பேரணில் இணைந்துக் கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிரக் தொடரணி நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.