ட்ரூடோ அமைச்சரவையிலிருந்து முன்னாள் நீதியமைச்சர் இராஜினாமா

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் அமைச்சரவையிலிருந்து முன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சன் இராஜினாமா செய்துள்ளார்.

கனேடிய பொறியியலாளர் நிறுவனமொன்றின் மீது வழக்கு தொடர்வதை தவிர்க்குமாறு பிரதமர் அலுவலகம் அவர் மீது அழுத்தம் பிரயோகித்து வந்தது. இதனையடுத்தே அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

எனினும், தனது பதவி விலகலுக்கான காரணம் தொடர்பாக இராஜினாமா கடிதத்தில் அவர் எதனையும் சுட்டிக்காட்டவில்லை.

கனத்த இதயத்துடன் அமைச்சரவையில் இருந்து விலகுவதாக பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜொடி வில்சன், கடந்த மாதம் நீதி அமைச்சர் பதவியிலிருந்து பதவியிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.