டொரோண்டோவில் அதிதீவிர பனிப்பொழிவு எச்சரிக்கை. பாடசாலைகளுக்கு விடுமுறை.

டொராண்டோவில் கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று (செவ்வாய்கிழமை) முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு தொடர்ந்தும் குளிர்காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக 20 வருட கால வரலாற்றில் முதல் முறையாக TDSB பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிகழ்வு நடந்துள்ளது.

Toronto District School Board, Toronto Catholic District School Board மற்றும் இதர பள்ளிகளுக்கு பனிப்பொழிவின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதீத பனிப்பொழிவு, வேகமாக வீசும் குளிர் காற்று, உறைநிலைக்கு கீழான வெப்ப நிலை போன்ற இயற்கை சீற்றத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

80 km/h வேகத்தில் காற்று வீசகூடும் என்பதால், வாகனஓட்டிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவின் காரணமாக விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 30 சதவிகித விமானங்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மட்டுமல்லாது சில கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றின் விவரம்.

The University of Toronto – Mississauga is closed.
· University of Toronto – Scarborough closed
· York University is closed and all university operations suspended. Classes scheduled for today are cancelled and exams postponed.
· Ryerson University is closed today.
· All Humber College campuses and the University of Guelph-Humber are closed today
· Seneca College is closed
· Centennial College is closed, as are the college’s child care centres
· George Brown College is closed
· All Georgian College campuses are closed today (Feb. 12) and classes are cancelled.