மிசிசாகாவில் கத்திக் குத்து: இருவர் மருத்துவமனையில்

நேற்று இரவு 11 மணியளவில், மிசிசாகா Main Street மற்றும் Queen Street South பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அங்கே இருவர் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், அவர்களில் பெண் ஒருவர் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆண் ஒருவர் பாரதூரமான காயங்களுடன் அவசர சிகி்ச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் தொடர்பிலான மேலதிக விபரங்களோ, காயமடைந்தவர்களின் பெயர் வயது உள்ளிட்ட மேலதிக விபரங்களோ உடனடியாக வெளியிடப்படவில்லை.

இருந்த போதிலும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.