யுனைற்றட் கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினருக்கு அச்சுறுத்தல் – சந்தேக நபர் கைது!

கனடாவின் யுனைற்றட் கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்னஞ்சல் ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யுனைற்றட் கொன்சர்வேற்றிவ் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதுதொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் 18 வயதான சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

Abdul Anas Habash என்ற 18 வயதான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர்.