போதையில் வாகனம் ஓட்டியதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது!

பீல் பிராந்திய பொலிஸ் கழகத்தின் தலைவர் மற்றும் யோர்க் பிராந்திய பொலிஸ் அதிகாரி என இரு காவல்துறையினர் வார இறுதி நாட்களில் போதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீல் பிராந்திய பொலிஸ் திணைக்களத்தில் பணிபுரியும், Burlington ஐ சேர்ந்த 44 வயதுடைய Adrian Woolley என்பவரும், யோர்க் பிராந்திய பொலிஸ் திணைக்களத்தில் பணிபுரியும் Barrie யை சேர்ந்த 42 வயதுடைய பெண் பொலிஸ் அதிகாரியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இருவருமே கடமையில் இல்லாத பொழுதே கைது செய்யப்பட்டுள்ளார்கள், மாகாண பொலிசார் இரண்டு கைதுகளையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.