பிரிட்டிஷ் கொலம்பியா இடைத்தேர்தல் – லிபரல் வெற்றிபெறும் என்று பிரதமர் நம்பிக்கை

புதிய சனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் போட்டியிடும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் Burnaby South தொகுதி இடைத்தேர்தலில் லிபரல் கட்சியே வெற்றி பெறும் என்றும், அந்த தொகுதியல் போட்டியிடும் லிபரல் கட்சி உறுப்பினருக்கு அங்கே பலத்த ஆதரவு உள்ளது எனவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 16 ஆண்டுகளாக குறித்த அந்த தொகுதியின் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்த லிபரல் கட்சியின் றிச்சேர்ட் டி லீ க்காக, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

உங்களுக்காக ஒடடாவாவில் குரல் கொடுக்கவல்ல, உங்களுக்காக நாடாளுடன்றில் விவாதிக்கவல்ல உள்ளூர் பிரபலம் ஒருவர் தேவை எனவும், அந்த தேவையை திறம்பட நிறைவேற்றுவதற்கு றிச்சேர்ட் மிகவும் தகுதியான ஒருவர் எனவும் இதன்போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது, குறித்த அந்தத் தொகுதியில் 550 வாக்குகள் வித்தியாசத்தில் லிபரகல் கட்சியை தோற்கடித்து புதிய சனநாயகக் கட்சி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.