ஸ்காபரோவில் இரண்டு தமிழர் நகைக்கடைகள் கொள்ளை!

நேற்று அதிகாலை 2 மணியளவில் (Feb 07, 2019; 2 AM) Finch Avenue & Middlefield Road சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள GTA Square Mallலில் முகங்களை மறைத்தவாறு கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்த இரண்டு திருடர்கள் அங்காடித்தொகுதியில் அமைந்துள்ள Ineeka Jewellery & Gift மற்றும் MJ’s Gold House ஆகிய கடைகளின் கண்ணாடிகளை உடைத்து உட்சென்று பல பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.


GTA Square Mall
Security camera footage shows two suspects breaking into jewelry stores at GTA Square Mall.

நடந்த சகல கொள்ளை சம்பவங்களிலும் Ineeka Jewellery & Gift கடை இலக்காக இருந்துள்ளது என்றும் சகல திருட்டுகளிலும் தனது கடை கொள்ளையிடப்பட்டுள்ளது என கடையின் உரிமையாளர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார். கடையின் உரிமையாளர் தான் நிறைய பணத்தை இழந்துவிட்டார் என்றும் சந்தேக நபர்கள் இதுவரை பிடிபட்டிருக்கவில்லை என்றும் தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

சந்தேக நபர்கள் சுமார் $ 7,500 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 4,000 முதல் $ 5,000 வரையான பணத்தை எடுத்துக் கொண்டதாக MJ’s Gold House உரிமையாளர் தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடத்தில் இந்த அங்காடி தொகுதியில் நடக்கும் மூன்றாவது திருட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் ஏப்ரல் 2018, மற்றும் டிசம்பர் 2018 இருமுறை திருட்டு நடைபெற்றிருந்தது. நேற்றுடன் மூன்றாவது திருட்டு.

இதுவரை இந்த மூன்று திருட்டிலும் எந்த திருடர்களும் பிடிபடவில்லை.

காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். கால்நடையாக ஓடிச்சென்ற இரு சந்தேக நபர்கள் குறித்த மேலதிக தகவல்களை திரட்டி வருகின்றார்கள்.