தொடர் கொலையாளி Bruce McArthur க்கு ஆயுள் தண்டனை!

டொரோண்டோவின் தொடர் கொலையாளி Bruce McArthurக்கு, 25 ஆண்டுகளின் பின்னரே பிணைக்கு விண்ணப்பிக்க முடியும் எனும் உத்தரவோடு, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இரண்டு ஈழத்தமிழர்கள் உள்ளடங்கலாக, 8 பேரை படுகொலை செய்த Bruce McArthur, அக்கொலை குற்றச்சாட்டுக்களை கடந்த வாரம் நீதிமன்றில் ஒப்புக்கொண்டிருந்தார்.

அவை பற்றிய விரிவான விபரங்கள் நீதிமன்றத்தால் கேட்டறியப்பட்டு வந்த நிலையில், இன்றையதினம் தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கனடாவில் மரணதண்டனை இல்லை என்பதும், கொலைகளுக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனையே வழங்கப்படுவது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொலைகளின் எண்ணிக்கை, தன்மைகளைப்பொறுத்து ஆயுள்தண்டனைக் காலங்கள் நிர்ணயிக்கப்படும்.