TGTE கனடாத் தேர்தல் ஆணையத்தின் ஊடகச் சந்திப்பும் பொதுமக்கள் கலந்துரையாடலும்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கனடாத் தேர்தல் ஆணையத்தின் ஊடகச் சந்திப்பும் பொதுமக்கள் கலந்துரையாடலும்.


நாள் : February 10th
நேரம் : 10:00 – 12:00
இடம்: JC Banquet Hall, 1686 Ellesmere Rd, Scarborough M1H2V5.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்திற்கான தேர்தல் 2019 ஏப்ரல் 27ம் நாள் நடைபெறும், இதர விபரங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 10ம் திகதி அறிவிக்கப்பட இருக்கின்றது.

தலைமைத் தேர்தல் ஆணையாளராக திரு. பொன் பாலராஜன் (Canada), தலைமைத் தேர்தல் ஆணைய உறுப்பினர்களாக செல்வி. இலச்சுமி லோகதாசன் (Australia), திரு. றோனி மறுசலீன் (France) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது முன்னரே அறிவிக்கப்பட்டது

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைக்குழுக்கள் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாகக் கனடா நாட்டின் தேர்தல் ஆணைக்குழுத் தலைவராக எமது சமுக செயற்ப்பாட்டாளர் திரு. சிவா ரட்ணசிங்கம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார், தேர்தல் அவதானிப்பாளராக திரு ஜோசெப் பெறெஷ் Josep Perez(President of the Catalan Centre of Toronto) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.

கலந்துரையாடலில் பங்குபற்றி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்கான தேர்தலை வெற்றியடைச் செய்வீர்கள் என எண்ணுகின்றோம்

தொடர்புகட்கு: election.commissioner@tgte.org

(416) 7518483 Ext 4