மத்திய கணக்காளார் நாயகம் புற்றுநோயால் மரணம்

கனடாவின் மத்திய கணக்காளர் நாயகம் மைக்கல் ஃபேர்குசன் தனது 60ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.


முன்னர் நியூ பிரவுன்ஸ்விக்கின் கணக்காளர் நாயகமாக கடமையாற்றி வந்த அவர், கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து மத்திய கணக்காளார் நாயகமாக பதவி வகித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இரு்நது புற்றுநோக்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், துர்ரதிஸ்டவசமாக சிகிக்சைகள் பலனளிக்காத நிலையில், ஒட்டாவாவில் அவர்களது குடும்பத்தோர் மத்தியில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது அலுவலக பணியாளர்கள், ஏனைய அதிகாரிகள், நாடாளுன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களால் பெரிதும் விரும்பப்பட்ட அவர், அவரது நற்பண்புகளுக்காகவும், கடமை உணர்சிக்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.