சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியரை சந்திக்க மீண்டும் அனுமதி!

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடாவைச் சேர்ந்த இருவரில், ஒருவரை சந்திப்பதற்கு கனடா தூதரக அதிகாரிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு காரணங்கள் கருதி இது தொடர்பாக மேலதிக தகவல்களை வௌியிட முடியாது என்று சர்வதேச விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக நேற்றைய தினம் (சனிக்கிழமை) மைக்கல் கொவ்ரிக் என்பவரை சந்தித்த அதிகாரிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் வௌியிடப்படவில்லை.

கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மைக்கல் கொவ்ரிக்கை தூதரக அதிகாரிகள் மூன்று முறை சந்தித்தித்துள்ளனர்.

கொவ்ரிக் மற்றும் மைக்கல் ஸ்பாவொர் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இரண்டு பேரும் சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவித்தார்கள் என்று சீன தரப்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.