கொலம்பியாவில் உயிரிழந்த கனேடிய பேராசிரியர் நஞ்சூட்டப்பட்டிருக்கலாம்?

கடந்த டிசம்பரில் கொலம்பியாவில் உயிரிழந்த கனேடிய பேராசிரியர் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.


முன்னர் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சைமன் ஃபிரேசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றிய 57 வயதான றமாஸான் ஜென்சே என்பவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொலம்பியாவில் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த சமயம், மெடிலின் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இரவு, தனது தங்குவிடுதிக்கு திரும்பாத நிலையில் காணமல் போயிருந்தார்.

பின்னர் அவர் டிசம்பர் 24ஆம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது குடிபாணத்தில் நஞ்சு கலக்கப்பட்டிருந்ததாக வன்கூவரில் உள்ள அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த இந்த பேராசிரியரின் மரணம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொலம்பிய உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ள போதிலும், குறித்த அந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.