நெடுஞ்சாலை 401இல் வாகனம் மோதி ஆண் ஒருவர் பலி

நெடுஞ்சாலை 401இன் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில், நோர்த் யோர்க் பகுதியில், கனரக வாகனம் ஒன்று மோதியதில் ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.


Yonge Street exit பகுதியில், பிற்பகல் 2.15 மணியளவில் குறித்த இந்த விபத்து சம்பவித்துள்ளதனையும், மோதுண்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதனையும் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் (OPP) உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த அந்த நபர் தனது வாகனத்தில் இருந்து வெளியே வந்திருந்த போது, கனரக வாகனத்தினால் மோதுண்டதாகவும், எனினும் என்ன காரணத்தினால் அவர் தனது வாகனத்திலிருந்து வெளியே வந்தார் என்பது தெரியவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தினை அடுத்து நெடுஞ்சாலையில் குறித்த அந்த பகுதி ஊடான போக்குவரத்துகள் விசாரணைக்காக தடை செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பிற்பகல் 6 மணியளவில் அவை மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளன.