அல்பர்ட்டாவில் ஃபென்டானில் பாவனையால் உயிரிழப்பு அதிகரிப்பு!

அல்பர்ட்டாவில் கடந்த 2017ஆம் ஆண்டை விட 2018ஆம் ஆண்டு ஃபென்டானில் (fentanyl) அளவுக்கதிமாக உபயோகித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


அல்பர்ட்டா சுகாதார அமைப்பின், ஓபியோட் ரெஸ்யூஸ் சர்வீலன்ஸ் காலாண்டு அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த அறிக்கையின் படி, 2018ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரையிலான தரவுகளின் படி, 582 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2017ஆம் ஆண்டு 165 பேர் உயிரிழந்ததாக அறிக்கை கூறுகின்றது.

இதுதவிர எட்மண்டனில் 166 பேரும், எட்மண்டன் வடக்கில் 39 பேரும், மத்திய எட்மண்டனில் 63 பேரும், கல்கரியில் 271 பேரும், கல்கரி மேற்கில் 43 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.